Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரோஹிங்கியர்களுக்கு எதிரான குற்றங்கள் இஸ்ரேலியரின் சதி – ஈரான்

In உலகம்
Published: 05:37 GMT, Sep 10, 2017 |
0 Comments
1303
icon_com
This post was written by : Suganthini
iran

இஸ்ரேலின் ஆட்சியில் சிக்கி முஸ்லிம் சமூகம் அவதியுறுவதாகத் தெரிவித்துள்ள ஈரானின் சிரேஷ்ட அதிகாரியொருவர், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்கள் இஸ்ரேலியரின் சதி நடவடிக்கை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவத்தையும் அவர் கண்டித்துள்ளார்.

மியன்மாரில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவம் தொடர்பில் இஸ்லாமிய விழிப்புணர்வு உலக சபையின் செயலாளர் நாயகம் அலி அக்பர் வேலயதி நேற்று (சனிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘சர்வதேச சீயோனிசத்தின் திட்டமிட்ட சதி மற்றும் அச்சுறுத்தல் செயற்பாடுகளானது முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை, அடக்குமுறை, இடப்பெயர்வு, இன அழிப்பு, பிராந்திய ஸ்திரமின்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கின்றது.

‘எனவே, இவ்வாறான சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச சமூகம் உள்ளிட்டவை முன்வர வேண்டும்’ எனவும் என்றார்.

‘மேலும், மியன்மார் அரசாங்கம் தனது யுத்தக் குற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் உரையாற்றப்பட வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவம் காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையில் அகப்பட்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறிருக்க, பலர் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறி பங்களாதேஷில் அடைக்கலம் கோரியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg