Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீழ்ந்தது மேற்கிந்தியா! – தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

In கிாிக்கட்
Updated: 09:00 GMT, Sep 10, 2017 | Published: 09:00 GMT, Sep 10, 2017 |
0 Comments
1332
This post was written by : Puvanes

இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிக்கொண்ட 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 123 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இங்கிலாந்து சார்பில் பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் திறமையாக செயற்பட்டு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து 194 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 60 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

71 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 177 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. ஷாய் ஹோப் 62 ஓட்டங்களையும், பாவெல் 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து 107 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 28 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் காரணமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றிக்கொண்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg