Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புளோரிடாவை தாக்கிய ‘எர்மா’ புயல் – மூவர் உயிரிழப்பு  

In உலகம்
Published: 05:02 GMT, Sep 11, 2017 |
0 Comments
1267
This post was written by : Suganthini
flo

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை ‘எர்மா’ புயல் தாக்கியுள்ள நிலையில், இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்திலாந்திக் கடலில் உருவாகிய ‘எர்மா’ புயல் முதலில் கரீபியன் தீவைத் தாக்கியது. இதன்போது, 28 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, புளோரிடாவை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ‘எர்மா’ புயல்  தாக்கியுள்ளதைத் தொடர்ந்து,  அங்கு பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவின் மேற்குக் கரையிலுள்ள மார்கோ தீவுகளில் இந்தப் புயல் மையம் கொண்டது.

இந்நிலையில், மணிக்கு 192 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், புளோரிடா மாநிலத்தில் கடும் மழையுடன் பலத்த காற்று வீசி வருகின்றது.

இந்நிலையில், புளோரிடா மாநிலத்தில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், 3.4 மில்லியனுக்கும் அதிகளவான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

அத்துடன், மியாமி நகரில் ஒரு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வீட்டுக் கூரைகள் தூக்கி எறியப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் பொதுவிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதற்கிடையில், ‘எர்மா’ புயல் புளோரிடா மாநிலத்தைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அம்மாநிலத்திலுள்ள சுமார் 6.3 மில்லியன் மக்களை வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள 650 தற்காலிகக் கூடாரங்களில் சுமார் 17 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.

புளோரிடா மாநிலத்தில் எர்மா புயல் பாரிய அழிபை ஏற்படுத்தியுள்ளது எனவும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய புளோரிடாவில் கடும் காற்று தொடர்ந்து வீசிக் கொண்டிருப்பதாக தேசிய புயல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg