Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அனிதாவின் வீட்டுக்கு சென்ற விஜய்: பரபரப்பானது அரியலூர்

In சினிமா
Published: 08:56 GMT, Sep 11, 2017 |
0 Comments
4716
icon_com
This post was written by : Surenth
Vijay At Ariyalur

நீட் தேர்வால் மருத்துவர் ஆக முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அனிதாவின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவிக்க, தளபதி விஜய் சமீபத்தில் நேரில் சென்று அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதே போன்று நடிகர் சூர்யாவும் நீட் தேர்வை விமர்சித்து நாளேடு ஒன்றில் ஒரு பக்கம் கட்டுரை எழுதியிருந்தார். இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிவேல், சீமான், அமீர் உள்ளிட்ட திரைத்துறையினரும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை எதிர்த்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் விஜய் அரியலூர் மாவட்டம் குழுமூரில் அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மற்றும் சகோதரரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அனிதாவின் தந்தை சண்முகத்துடன் அவர் தரையில் அமர்ந்து ஆறுதல் கூறியுள்ளார்.

அனிதாவின் தந்தை சண்முகத்தின் தோல் மீது கை போட்டு விஜய் ஆறுதல் சொல்லும் ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த ஒளிப்ப்படத்தில் அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர் இருவருக்கும் இடையில் அமர்ந்து விஜய் ஆறுதல் கூறுகின்றது போல அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg