Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் – குழப்பத்தில் வாக்களிக்க நேரிடுமென எச்சரிக்கை

In
Updated: 11:40 GMT, Sep 11, 2017 | Published: 11:40 GMT, Sep 11, 2017 |
0 Comments
1266
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான சட்டமூலத்தை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் குழப்பமானதொரு நிலைமையில் வாக்களிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்காக கடந்த வருடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது, மக்கள் குழப்பமான நிலைமையில் வாக்களிக்கவில்லை பிரித்தானியாவின் பிரெக்சிற் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் கோபமடையச் செய்ய வேண்டாம் என பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதாகத் தீர்மானித்த நிலையில், இதற்கான வாக்கெடுப்பு கடந்த வருடம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg