Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாதத்துடன் தொடர்பு – இரு பிரித்தானியப் படை வீரர்கள் மீது குற்றச்சாட்டு

In
Updated: 06:01 GMT, Sep 12, 2017 | Published: 05:57 GMT, Sep 12, 2017 |
0 Comments
1154
This post was written by : Suganthini

பிரித்தானியப் படை வீரர்கள் இருவர் உட்பட மூவர், ‘neo-Nazi’  எனும் அமைப்புடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

22, 24, 32 ஆகிய வயதுகளையுடைய மூவர் மீதே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கடந்த 2016ஆம் ஆண்டு  ‘neo-Nazi’  எனும் அமைப்பு தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட இந்த அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், இம்மாதம் 5ஆம் திகதி, 5 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட ‘neo-Nazi’ எனும் அமைப்புடன் இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இவர்கள் திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இவர்களில் ஏனைய இருவர் மீதும் எந்தவிதக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 ‘neo-Nazi’  எனும் அமைப்பானது,  பிரித்தானிய அரசாங்கத்தால் பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த ஆண்டில் தடை செய்யப்பட்ட முதலாவது தீவிர வலதுசாரி அமைப்பு இதுவாகும்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கொக்ஸின் படுகொலைக்கு பின்னர் இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg