Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

20ஆவது திருத்தம் குறித்து விளக்கம் தருகிறார் தண்டாயுதபாணி

In இலங்கை
Updated: 09:14 GMT, Sep 12, 2017 | Published: 09:05 GMT, Sep 12, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Surenth
20th Amendment With Thandayuthapani

சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கிய உத்தரவுக்கமைய, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் 20வஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு விளக்குகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு மாகாண சபைகளின் அபிப்பிராயத்தை கோர நகல் சட்ட மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டது. மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவே 20ஆவது திருத்த நகல் இருந்ததால் அது எமக்கு திருப்தி அளிக்கவில்லை.

மாகாண சபைகளை கலைக்கக் கூடிய அதிகாரம் அத்தோடு சகல மாகாண சபைகளுக்கம் ஒரே நாளில் தேர்தல் நடாத்தவது, தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கின்ற அதிகாரம் என்பவற்றை நாடாளுமன்றத்திற்கு வழங்கும் வகையில் இந்த சரத்துக்கள் அமைந்திருந்தன.

ஆகவே மாகாண சபை மீது நாடாளுமன்றம், ஆதிக்கம் செலுத்தும் இந்த சட்டத்தை நாங்கள் முதலில் ஆதரிக்கவில்லை. இச்சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தை நாங்கள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தோம்.

திருத்தங்கள் அவசியமாகிறது என்ற கருத்தை எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் தெரியப்படுத்தி இருந்தோம். அதற்கமைய தற்போது திருத்தி அமைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள புதிய 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு வழங்கினோம். எனவும் தண்டாயுதபாணி குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg