Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்திய ஜேர்மனி

In ஐரோப்பா
Published: 12:08 GMT, Sep 12, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Suganthini
ger

துருக்கிக்குப் பாரிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை ஜேர்மன் நிறுத்திக் கொண்டுள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையைக் கருத்திற்கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் குற்றச்சாட்டில் மற்றுமொரு தம்பதியினர் துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

ஜேர்மனி உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளும் துருக்கியப் பிரஜைகள் மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று தனது பிரஜைகளுக்கு, துருக்கிய அரசாங்கம் கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிட்ட ஜேர்மன் கன்சர்வேட்டிவ்; கட்சி அதிபர் அங்கேலா மெர்கல், துருக்கியப் பிரஜைகள் அனைவரும் எந்தவித அச்சமுமின்றி ஜேர்மனுக்கு சுமூகமான பயணத்தை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஜேர்மனியிலுள்ள துருக்கியப் பிரஜைகள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாகவே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜேர்மனியில் இம்மாதம் 24ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜேர்மனியில் கடந்த வாரம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தின்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து துருக்கியை இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலைமை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg