Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

யேமனில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படவில்லை – சவூதி சட்ட ஆலோசகர்

In உலகம்
Published: 05:02 GMT, Sep 13, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Suganthini

யேமனில் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெறவில்லை என, சவூதி அரேபிய தலைமையிலான கூட்டணி நாடுகளால் அமைக்கப்பட்ட குழுவின் சட்ட ஆலோசகர் மன்சூர் அஹமட் அல் மன்சூர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘யேமனில் விமானத் தாக்குதல்களின்போது, இடம்பெற்றுள்ள பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சவூதி தலைமையிலான கூட்டணி நாடுகள், குழுவொன்றை நியமித்தது.

இந்நிலையில், மனிதாபிமானச் சட்டங்களுக்கு அமையவே எமது குழு விசாரணையை முன்னெடுத்துள்ளது’ எனவும் கூறியுள்ளார்.

‘பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடுகள், பாடசாலைகள், கிளினிக்குகள் ஆகியவற்றின் மீதே விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 15 தாக்குதல் சம்பவங்களில் 3 சம்பவங்கள் மாத்திரமே தவறு காணப்படுகின்றன எனவும் எமது குழு சுட்டிக்காட்டியுள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறிருக்க, ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் செய்ட் அல் ஹுஸைசன், யேமனில் பொதுமக்கள் மீது இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அவசர விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், யேமனில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் வீடுகள் மற்றும் பலசரக்குக் கடையொன்றை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg