Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உக்ரைனின் புதிய கல்விச் சட்டத்திற்கு ரஷ்யா கண்டனம்

In ஐரோப்பா
Updated: 07:08 GMT, Sep 13, 2017 | Published: 07:05 GMT, Sep 13, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Elakkiya
eae8b3f7-1cf7-4193-bb7d-862e9db1f6f5

உக்ரைனின் புதிய கல்விச் சட்டம் ரஷ்ய மொழி பேசுபவர்களின் உரிமைகளை மீறும் செயற்பாடு என ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளில் பிரதான மொழியாக உக்ரைனியன் மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் ஏனைய மொழிகள் விருப்பத்திற்கு ஏற்பவே கற்பிக்கப்பட வேண்டும் என்ற உக்ரைனின் கல்வி சீர்திருத்த சட்டமூலத்திற்கு கடந்த 5 ஆம் திகதி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், பல்லின மக்கள் வாழும் நாட்டில் இன மொழி ஆட்சியை கட்டாயப்படுத்தி இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது உக்ரைனின் அரசியலமைப்பையும் கிவ்வின் சர்வதேச கடமைகளையும் மீறும் செயற்பாடாகும் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹங்கேரி, ருமேனியா, மோல்டோவா உட்பட உக்ரைனின் அயல்நாடுகளும் இந்த சட்டம் தொடர்பில் தமது கவலை வெளியிட்டுள்ளன.

உக்ரைன் முழுவதும் ரஷ்ய மொழியே பேசப்படுகின்றது. ஆனாலும் பெரும்பான்மையாக ரஷ்ய மொழி பேசப்படும் கிழக்கு பிராந்தியங்களில் மொழி முக்கிய பிரச்சினையாக உள்ளது.

உக்ரைனியன் தவிர வேறு மொழிகளின் வளர்ச்சியை இந்த சட்டம் தடைசெய்யாது என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பவ்லோ கிளிம்கின் இவ்வார ஆரம்பத்தில் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)