Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்து – 5 மாலுமிகள் மாயம்

In உலகம்
Published: 12:17 GMT, Sep 13, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Suganthini

சிங்கப்பூர் கடற்பரப்பில் படகொன்றுடன் எண்ணெய்த் தாங்கிக் கப்பலொன்று மோதி விபத்துக்குள்ளானதில், 5 மாலுமிகள் காணாமல் போயுள்ளனர்.

இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ள இந்த விபத்தைத் தொடர்ந்து, சீனாவைச் சேர்ந்த மூவரும் மலேசியாவைச் சேர்ந்த ஒருவருமே காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சிங்கப்பூர் கடற்படையினரும் மீட்புப் பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் கப்பலில் பயணித்த சீனப் பிரஜைகள் 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த விபத்தைத் தொடர்ந்து, குறித்த படகு நீரில் மூழ்கியுள்ள அதேவேளை, குறித்த எண்ணெய்த் தாங்கி சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவுக்குச் சொந்தமான எண்ணெய்த் தாங்கி கப்பலொன்றே விபத்துக்குள்ளானது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg