Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திசர பெரேரா வெறியாட்டம்: பாகிஸ்தான் சொந்த மண்ணில் திண்டாட்டம்

In கிாிக்கட்
Published: 04:14 GMT, Sep 14, 2017 |
0 Comments
2380
icon_com
This post was written by : Anojkiyan
qck_6fec8_1505324489

உலக பதினொருவர் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், உலக பதினொருவர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (புதன்கிழமை) லாகூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பாபர் அசாம் 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் திசர பெரேரா மற்றும் சமுவேல் பத்ரி ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய உலக பதினொருவர் அணி, திசர பெரேராவின் அதிரடியின் துணையுடன் 19.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதன்போது அசிம் அம்லா ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும், திசர பெரேரா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரை 1-1 என உலக பதினொருவர் அணி சமநிலைப்படுத்தியது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்து வீச்சுலும் துடுப்பாட்டத்திலும் ஜொலித்த திசர பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg