Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புல்லட் ரயில் சேவைக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் ஜப்பான் பிரதமர்

In இந்தியா
Published: 04:59 GMT, Sep 14, 2017 |
0 Comments
1084
icon_com
This post was written by : Kemasiya

இந்தியாவிற்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் இன்று (வியாழக்கிழமை) காலை இந்தியாவின் முதலாவது  புல்லட்  ரயில்  சேவைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

குறித்த ரயில் திட்ட பணிகள் 2020ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்த புல்லட் ரயில் திட்டம் நிறைவடைந்தால் ஆமதாபாத் நகரில் இருந்து மும்பையை 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் ஜப்பானின் வருடாந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவின் ஆமதாபாத் நகரை நேற்று வந்தடைந்தார். இவருடன் மனைவியும் உடன்வந்திருந்தார். இவர்களை நேரில் சென்று பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் மக்கள் பார்வையோடு வரவேற்று வந்தார். திறந்த வாகனத்தில் வெளிநாட்டு பிரதமரை வரவேற்பது இந்தியாவிலே இது தான் முதல்தடவையாகும்.

அதன் பின்னர் சமர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அவருடைய மனைவி ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதன் போது ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயின் மனைவிக்கு காந்திடிகள் பற்றி பிரதமர் மோடி விளக்கமளித்தார்.

ஷின்ஸோ அபே ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைதி வளம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு இந்தியாவுடன் ஜப்பான் இணங்கி செயற்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)