Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் அணிக்கு பெருமை சேர்த் சொயிப் மலிக்

In கிாிக்கட்
Published: 06:18 GMT, Sep 14, 2017 |
0 Comments
2033
icon_com
This post was written by : Anojkiyan
mali

பாகிஸ்தான் அணிக்காக ரி-ருவென்ரி போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வீரர் என்ற பெருமையை சொயிப் மலிக் பெற்றுள்ளார்.

உலக பதினொருவர் அணிக்கெதிரான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், 39 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டதன் மூலம் அவர் இந்த பெருமையை பெற்றுக்கொண்டார்.

அவர் 88 போட்டிகளில் 1702 ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக உமர் அக்மல் 1690 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், மொஹமட் ஹபீஸ் 1619 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

லாகூர் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டியில், உலக பதினொருவர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg