Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க இராஜாங்க செயலாளர் பிரித்தானியா விஜயம்

In
Published: 07:12 GMT, Sep 14, 2017 |
0 Comments
1241
icon_com
This post was written by : Elakkiya

இர்மா புயல் தாக்கங்களை ஈடுசெய்யும் வகையில் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) பிரித்தானியாவை சென்றடைந்த ரெக்ஸ் டில்லர்ஸன் இன்று பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பொரிஸ் ஜோன்சனை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இர்மா புயல் தாக்கங்கள் மாத்திரமன்றி வடகொரியா மற்றும் லிபிய பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சந்திப்பு முன்னதாக கருத்து வெளியிட்ட பொரிஸ் ஜோன்சன், இர்மா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறுகிய கால மற்றும் நீண்டகால மீட்பு முயற்சிகளுக்கு கூட்டாளி நாடுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg