Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புற்றுநோயை கண்டறியும் பேனா

In அறிவியல்
Updated: 07:18 GMT, Sep 14, 2017 | Published: 07:18 GMT, Sep 14, 2017 |
0 Comments
1280
This post was written by : Kemasiya

ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருவியானது வேகமாகவும், பாதுகாப்பாகவும் மட்டுமல்லாமல், கூடுதல் துல்லியத்துடனும், புற்றுநோய்க்கு கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உதவும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்குப் பின்னர் எதாவது புற்றுநோய் அணுக்கள் உடலை விட்டு வெளியேறாமல் இருந்துவிடும் துயரத்தைத் தவிர்க்க, இது உதவும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

புற்றுநோய் அணுக்களின் தனிப்பட்ட வளர்சி மாற்றத்தை இந்த ‘மாஸ்பெக் பேனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள சாதனம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. புற்றுநோய் திசுக்கள் வளர்வதிலும் பரவுவதிலும் காட்டும் வேகம், அவற்றின் உள்வேதியியல் ஆரோக்கியமான திசுக்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை வெளிப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg