Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய வருமான வரிச் சட்டமூலம் மேலதிக வருமானத்தை ஈட்டும்- நிதியமைச்சர்

In இலங்கை
Updated: 09:26 GMT, Sep 14, 2017 | Published: 09:23 GMT, Sep 14, 2017 |
0 Comments
1163
This post was written by : elayathambi
mangala-samaraweera

புதிய வரிச் சட்டமூலத்தின் மூலம் இலங்கை 45 பில்லியன் ரூபாவை மேலதிகமாக பெற்றுக் கொள்ளும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்பொது நிலவும் சட்ட ஓட்டைகளை இல்லாமலாக்கும் நோக்கில் புதிய வருமான வரிச் சட்டமூலங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் உள் நாட்டு இறைவரியானது கணிசமான அளவு உயரும் என நிதியமைச்சு நம்புகிறது.

புதிய சட்டமூலங்கள் இரு கட்டங்களாக அறிமுகமாக இருக்கின்றன. வருமான வரி ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியும், சட்டமூலங்களின் முழுமையான அமுலாக்கம் அடுத்த ஆண்டு ஏப்பிரல்  முதலாம் திகதியும் நடைமுறைக்கு வருகின்றன.

இலங்கையின் உள் நாட்டு இறைவரி, சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றில் பல நவீன மாற்றங்கள் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் சர்வதேச வரிக் கோப்பிலக்கம் ஒன்றை ( universal tax file number|)  அறிமுகம் செய்ய இருப்பதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg