Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

40 ஆண்டுகளின் பின்னர் தாயகம் திரும்பும் லுப்தான்சா 181 விமானம்

In ஐரோப்பா
Published: 10:11 GMT, Sep 14, 2017 |
0 Comments
3807
icon_com
This post was written by : Elakkiya

பலஸ்தீன போராளிகளால் கடந்த 1977 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ஜேர்மனிய விமானம் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான முயற்சியில் வடக்கு பிறேஸிலில் மீளமைக்கப்படுகின்றது.

லுப்தான்சா 181 என்று அறியப்படும் போயிங் 737 என்ற விமானம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் 82 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்களுடன் பலஸ்தீன போராளிகளால் கடத்தப்பட்டது.

ஜேர்மனிய அதிகாரிகள் மூவர் மற்றும் வர்த்தகர் ஒருவரை கொலைசெய்ய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த Red Army Faction  என்று அழைக்கப்படும் RAF தலைவர்கள் பத்துபேரின் விடுதலையை வலியுறுத்தியே இந்த விமானம் கடத்தப்பட்டது.

கடந்த 1977 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி கடத்தப்பட்ட  இந்த விமானம்  மத்திய கிழக்கு ஊடான நான்கு நாள் பயணத்தின் பின்னர்  சோமாலியாவில் தரையிறக்கப்பட்டது. ஒக்டோபர் 18 ஆம் திகதி ஜேர்மனிய பயங்கரவாத எதிர்ப்பு குழுவினரால் மீட்கப்பட்டது. இதன்போது நான்கு கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg