Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2024 ஒலிம்பிக் போட்டிக்கு பரிஸ் தெரிவு- ஜனாதிபதி இமானுவல் மகிழ்ச்சி

In ஐரோப்பா
Published: 10:37 GMT, Sep 14, 2017 |
0 Comments
1286
This post was written by : Elakkiya

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச ஒலிம்பிக் சபையின் இந்த முடிவை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் வரவேற்றுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) தொலைக்காட்சி நிருபர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, “2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பரிஸை தெரிவு செய்த ஒலிம்பிக் குழுவிற்கும், ஒலிம்பிக் சபைத் தலைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு பிரான்ஸ் ஒன்றிணையும். இது பிரான்ஸின் புதிய அத்தியாயம். 2024 ஒலிம்பிக் போட்டிகள் பரிஸின் விளையாட்டாக இருக்கும். பரிஸ் முக்கிய பங்கு வகிக்கும்”  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக பரிஸ் இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 1924 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பரிஸில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg