Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு தலைவராக க்ரேம் லப்ரோய்?

In கிாிக்கட்
Updated: 11:38 GMT, Sep 14, 2017 | Published: 11:38 GMT, Sep 14, 2017 |
0 Comments
1439
This post was written by : Anojkiyan

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு தலைவராக க்ரேம் லப்ரோய் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இம்மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடருக்கு இலங்கை அணியை க்ரேம் லப்ரோய் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தெரிவுக் குழுவே தெரிவுசெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் குழுவிற்கு அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் நிர்வாகியுமான ஜயந்த செனவிரத்ன மற்றும் முன்னாள் டெஸ்ட் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மலிந்த வர்ணபுர ஆகியோர் புதிதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்களான எரிக் உபஷாந்த மற்றும் ரஞ்சித் மதுருசிங்ஹ ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணிக்கெதிராக இலங்கை அணி அனைத்து தொடரையும் முழுமையாக இழந்ததன் காரணமாக சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக் குழு அதிரடியாக பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg