Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரான்ஃபெல் தீ விபத்து: பொது விசாரணைகள் ஆரம்பம்

In
Updated: 11:45 GMT, Sep 14, 2017 | Published: 11:45 GMT, Sep 14, 2017 |
0 Comments
1231
This post was written by : Varshini
granfel tower

லண்டன் கிரான்ஃபெல் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான பொது விசாரணைகள், இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.

80 பேரின் உயிர்களை காவுகொண்ட குறித்த தீ விபத்திற்கு, முறையற்ற நிர்வாக அமைப்பே காரணம் என பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், பிரதமர் தெரேசா மேயின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஓய்வுபெற்ற நீதிபதி மார்டின் மூரே பிக் என்பவரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், குறித்த விபத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் பொது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

விசாரணைகளின் போது சகல சிபாரிசுகளையும் உள்வாங்குவதாக குறிப்பிட்ட மார்டின் மூரே, தீ விபத்தில் உயிர்பிழைத்த ஒருவரை விசாரணை குழுவில் உள்ளீர்ப்பதை நிராகரித்தார். விசாரணையின் பாரபட்சமற்ற தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதற்காகவே தாம் அவரை நிராகரித்ததாக ஓய்வுபெற்ற நீதிபதி குறிப்பிட்டார்.

இழந்த உயிர்களையும், சொத்துக்களையும் மீள பெறமுடியாது என்கின்ற போதிலும், 21ஆம் நூற்றாண்டில் அதுவும் லண்டனில் இவ்வாறான ஒரு அசம்பாவிதம் எவ்வாறு ஏற்பட்டதென்ற மர்மத்திற்கு விடை கிடைக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

24 மாடிகளை கொண்ட கிரான்ஃபெல் குடியிருப்பில், மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களே வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் இக் கோர சம்பவம் இடம்பெற்றது. திடீரென பரவிய இத் தீ, ஏனைய குடியிருப்புகளுக்கு மிக வேகமாக பரவிய நிலையில், மக்கள் நிர்க்கதிக்கு உள்ளாகினார். சுமார் 140 குடும்பங்கள் வீடுகளை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டதோடு, சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

அளவுக்கு அதிகமான மாடிகளை கட்டியமை மற்றும் எளிதில் தீர்ப்பற்றக்கூடிய உலோகம் இம் மாடிகளின் கூரைகளின் பயன்படுத்தப்பட்டமை போன்றவையே இத் தீ விபத்திற்கு காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், குறித்த குடியிருப்பை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்தவர்கள், பிரதமர் தெரேசா மேயின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

அரசாங்கத்தையே கேள்விக்குட்படுத்திய இச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பிரதமர் தெரேசா மே வாக்குறுதி அளித்தமைக்கு அமைவாக, இவ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg