Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சட்டவிரோத மதுபான விற்பனை: 10 பேருக்கு சிறைத்தண்டனை!

In இலங்கை
Published: 12:32 GMT, Sep 14, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Ravivarman
S4910016

சட்டவிரோதமான முறையில் சாராயம் விற்பனை செய்த பத்துப்பேருக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் தண்டப்பணத்தைச் செலுத்தத்தவறும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் தலா ஆறுமாதகால சிறைத்தண்டனையும் விதித்துள்ளார்.

கைதான நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஆஜர்ப் படுத்தபட்டபோதே மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவண்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பெருமளவிலான கசிப்பு மற்றும் கோடா சட்டவிரோத சாராயம் அதனைத் தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் என்பனவும் மதுவரி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

S4910017 S4910015 S4910012

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg