Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது- நீதிமன்றம் தெரிவிப்பு

In இந்தியா
Published: 05:31 GMT, Sep 15, 2017 |
0 Comments
1053
icon_com
This post was written by : Kemasiya
tamil_15

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்தும்   போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று(வியாழக் கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் அளித்த தமிழக அரசு 43,508 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும் வேலைநிறுத்த நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எழுப்பிய 12 கேள்விகளுக்கும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து அரசு ஆசிரியர்களின் ஊதிய விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg