Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் புதிய தொழில் நகரம்: ஜப்பானை இந்தியாவிற்குள் அழைக்கும் பிரதமர்

In இந்தியா
Updated: 06:46 GMT, Sep 15, 2017 | Published: 06:46 GMT, Sep 15, 2017 |
0 Comments
1299
This post was written by : Kemasiya

தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் ஜப்பானியத் தொழில் நகரங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்கள் அதிகளவில் முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா-ஜப்பானுக்கிடையே 12ஆவது உச்சி மாநாடு குஜராத் மாநிலம் ஆமதாபாதில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜப்பானும் இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடாக திகழ்கின்றது. ஜப்பானிய மக்களையும், தொழில் நிறுவனங்களையும், இந்தியாவிற்கு அழைக்கின்றேன். இந்திய மண்ணிற்கு வந்து எங்கள் மக்களுடன் இணைந்து ஜப்பானியர்கள் பணியாற்ற வேண்டும், தொழில் முதலீடு செய்து வளர்ச்சியடைய வேண்டும்.

அத்துடன் இந்தியாவில் ஜப்பானிய தொழில் நகரங்கள் அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் ஆந்திரா குஜராத் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் அத்தகைய தொழில் நகரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஜப்பானுக்கு அளப்பரிய பலன்கள் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை.

இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக இங்கு தொழில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள உகந்த சூழல் நிலவி வருகின்றது.

அதைப் பயன்படுத்தி கொண்டு இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வளர்ச்சியை எட்ட வேண்டும். ஏனெனில் உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றலை இரு நாடுகளும் தன்னகத்தே கொண்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg