Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நானுஓயா முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு!

In இலங்கை
Published: 08:07 GMT, Sep 15, 2017 |
0 Comments
1281
This post was written by : Ravivarman

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோஸ்போட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமும், எபோஸ்போட் தமிழ் வித்தியாலயத்தின் களஞ்சியசாலையும், இனந்தெரியாதவர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் பெறுமதியான பொருட்களை களவாடவில்லை எனவும், சிறுவர் நிலையத்தில் உள்ள எரிவாயு சிலிண்டர்களை மட்டும் களவாடிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.

அத்தோடு நானுஓயா பொலிஸாருக்கு புகார் செய்யப்பட்டதையடுத்து நுவரெலியா பொலிஸார் மோப்பநாய்களுடன் ஆலய கட்டிட வளாகத்திலும், பாடசாலை வளாகத்திலும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

DSC09484 DSC09483 DSC09481

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg