Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் ராகுல்?

In இந்தியா
Published: 06:45 GMT, Sep 16, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Vithushagan
RAHUL-SONIA_3181631f

ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளார்  என அக்கட்சியின்  மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக பதவி வகிக்கும் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றநிலையில், இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வீரப்ப மொய்லி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பதவி ஏற்பது கட்சிக்கு மிக நல்லது , ஆனால் அவர் தலைவர் பதவியை ஏற்க தாமதம் செய்து வருகிறார்.

அவர் உள்க்கட்சி தேர்தலை சந்திக்க ஆர்வமாக உள்ளார். கட்சியினர் மூலம் தலைவரான தேர்ந்தெடுக்கப்படுவதையே அவர் விரும்புகிறார்.

இவர் தலமை பொறுப்பை தேர்ந்தெடுத்து காங்ரஸ் கட்சியில் பெரும் மாற்றத்தை உருவாக்குவார். அதேபோல் அவர் அடுத்த பிரதமராகி இந்திய மக்களுக்கு நன்மை உண்டாக்குவார்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg