Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

யாழில் துண்டுப்பிரசுர விநியோகப் போராட்டம்!

In இலங்கை
Published: 10:26 GMT, Sep 16, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Ravivarman
z

மருத்துவக் கல்விக்காய் மரணித்த தமிழ்நாட்டு ஏழை மாணவி அனித்தாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும், சமூக அநீதிகளுக்கு எதிராய் குரல்கொடுத்த இந்திய ஊடகவியலாளர் கௌரி லங்கேஸ் படுகொலையை வன்மையாகக் கண்டித்தும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுர விநியோகப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

யாழ்.பஸ் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலையில் குறித்த ‘துண்டுப் பிரசுர விநியோகப் போராட்டம்’ இடம்பெற்றது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

தமிழ்நாடு அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்ததும், இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான கௌரி லங்கேஸ் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமையும் கண்டிக்கப்பட வேண்டிய விடயங்களாகும் என குறித்த துண்டுப் பிரசுரங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

xc f

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg