Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இளைஞர் மாநாடு!

In இலங்கை
Published: 11:51 GMT, Sep 16, 2017 |
0 Comments
1166
This post was written by : Ravivarman
1678749203malayaga-makkal-munnani

மலையக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வு காலை 11.00 மணியளவில் கொட்டகலை ரொசிட்டா சந்தியில் இருந்து மலையகத்தைப் பிரதிபலிக்கும் கலை கலாசார நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான மண்டபத்தை வந்தடைந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான அமரர் சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மலேசிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன் கோவின், மலேசிய நாட்டின் கவுன்சிலர் டத்தோ மணிவண்ணன் உட்பட பெருந்திரளான இளைஞர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

1678749203malayaga-makkal-munnani (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg