Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நவம்பாில் அமுலுக்கு வருகிறது பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்டவா்களுக்கான சட்டம்!

In இலங்கை
Updated: 04:52 GMT, Sep 17, 2017 | Published: 02:58 GMT, Sep 17, 2017 |
0 Comments
1413
This post was written by : Anojkiyan

பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான சட்டம் எதிர்வரும் நவம்பரில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொல்பிதிகம பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டம் ஒருபோதும் கடந்த காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டம் ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.

எனினும் முன்னர் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இந்த சட்டத்தின் கீழ் ஒருபோதும் வழங்கு தொடர முடியாது. அவற்றுக்கு வேறு முறைகள் உள்ளன. சட்டத்தை மாற்ற முடியாது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg