Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க தீா்மானம்!

In உலகம்
Updated: 07:49 GMT, Sep 17, 2017 | Published: 07:49 GMT, Sep 17, 2017 |
0 Comments
1370
This post was written by : Suganthini

வடகொரியாவானது மிகவும் சக்திவாய்ந்த அணுவாயுதப் பரிசோதனை மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது மேலும் அதிகளவான பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு தென்கொரியாவும் அமெரிக்காவும் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பாக தொலைபேசி மூலமாக தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போதே, வடகொரியா மீது அதிகளவான பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர் என, தென்கொரியாவின் ஜனாதிபதி அலுவலகப் பேச்சாளர் பார்க் சூ கையூன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பலமான அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில், இரு நாட்டுத் தலைவர்களும் ஒத்துழைத்துச் செயற்படவுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளே இந்த நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடகொரியாவானது மற்றுமொரு ஏவுகணைப் பரிசோதனையை நேற்றுமுன்தினம் நடத்தியிருந்தது. இந்த ஏவுகணைச் சோதனையின்போது, பசுபிக் பெருங்கடலில் சென்று விழுவதற்கு முன்னர், அந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடா தீவுக்கு மேலான வான்வெளியில் பறந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்திருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg