Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹர்திக் பாண்டியாவின் தொடரும் ஹட்ரிக் சிக்ஸர்கள்

In கிாிக்கட்
Updated: 06:38 GMT, Sep 18, 2017 | Published: 06:38 GMT, Sep 18, 2017 |
0 Comments
2348
This post was written by : Risha
Hardik Pandya

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை விலாசியுள்ளார்.

பாண்டியா, நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) போட்டியில் விலாசிய ஹட்ரிக் சிக்ஸர்களானது, கடந்த நான்கு மாதத்தில் அடித்த நான்காவது ஹட்ரிக் சிக்ஸர்களாகும்.

நேற்றைய போட்டியில் அவுஸ்ரேலிய அணியின் ஆடம் சம்பாவின் பந்துகளுக்கே இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று ஓட்டங்களை குவித்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானின் இமாத் வசீமின் பந்துவீச்சிற்கு இந்த ஹட்ரிக் சாதனையை ஆரம்பித்த பாண்டியா, தொடர்ந்து பாகிஸ்தானின் சதாப் கான், இலங்கை அணியின் மலிந்த புஷ்பகுமார ஆகியோரின் பந்துவீச்சிற்கு இவ்வாறு ஹட்ரிக் சிக்ஸர்களை விலாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg