Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இமானுவேல் அடிகளாரின் இலங்கை விஜயமும் பேரினவாதத்தின் எதிரொலியும்!

In இலங்கை
Updated: 12:28 GMT, Sep 18, 2017 | Published: 07:35 GMT, Sep 18, 2017 |
0 Comments
1927
This post was written by : Varshini

இலங்கையின் போர்க்குற்ற நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் குரல்கொடுத்துவரும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் அடிகளார், இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடன் ரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து சென்ற இமானுவேல் அடிகளார், இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டுசென்றார். அதனைத் தொடர்ந்து, கடந்த மஹிந்த அரசாங்கம் பயங்கரவாத தடைப்பட்டியலில் இமானுவேல் அடிகளாரை சேர்த்திருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தில் அத் தடை நீக்கப்பட்டதோடு, அவரை இலங்கை வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் இலங்கை வந்துள்ள அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.தே.க.வின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்தோடு, யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்கும் பல சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரினவாதிகளால் புலி முத்திரை குத்தப்பட்ட இமானுவேல் அடிகளாரின் தடை நீக்கம் குறித்து சில கடும்போக்குவாதிகளால் ஏற்கனவே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் தற்போதைய இலங்கை விஜயம் தொடர்பாக ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

நாட்டை பிரிக்கும் திட்டத்துடனேயே இமானுவேல் அடிகளார் இலங்கை வந்துள்ளார் என்றும், பிரிவினைவாதத்திற்கு அரசாங்கமும் துணை போகின்றதெனவும் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg