Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றாா் சுஷ்மா சுவராஜ்

In இந்தியா
Updated: 12:07 GMT, Sep 19, 2017 | Published: 07:52 GMT, Sep 18, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Kemasiya
201709181156513094_Sushma-Swaraj-arrives-in-New-York-to-attend-UN-General_SECVPF

அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியூயோர்க் சென்றுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை)  நியூயோர்க் சென்றடைந்த இவரை, நியூயோர்க் விமான நிலையத்தில் இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா மற்றும் ஐ.நா. சபைக்கான இந்திய பிரதிநிதி சையத் அக்பருதின் ஆகியோர் சுஷ்மா சுவராஜை வரவேற்றனர்.

சுஷ்மா சுவராஜ் அமெரிக்காவில் தங்கி இருக்கும் 1 வார காலத்தில் தீவிரவாதம், பருவநிலை மாற்றம் மற்றும் அமைதியை பாதுகாத்தல் போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்படும் என அக்பருதின் தெரிவித்தார். நியூயோர்க் நகரில் 20 நாடுகளின் தலைவர்களை சுஷ்மா சந்தித்து பேசுகிறார்.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டாரோ கோனோ ஆகியோருடனான முத்தரப்பு கூட்டத்தில் சீனாவின் எல்லை மீறல் குறித்து ஆலோசனை செய்யப்படும் என தெரியவரகின்றது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தங்கள் செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திலும் சுஷ்மா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg