Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமஷ்டிக்கு பதிலாக மாற்றுத்திட்டம்! – மாவை சேனாதிராஜா

In இலங்கை
Published: 10:27 GMT, Sep 18, 2017 |
0 Comments
1345
This post was written by : Varshini

‘சமஷ்டி’ என்ற சொல்லாட்சியால் ஏற்படும் விளைவுகளை அரசியல் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்றுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அதனை ஏற்பதா இல்லையா என்பது குறித்து, எதிர்வரும் 21ஆம் திகதி உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் தீர்மானிக்கப்படுமென அவர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பாய் கோமகன் என அழைக்கப்படும், கோப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 58வது நினைவுதினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கோப்பாயில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, மாவை மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டியையும் வடக்கு கிழக்கு இணைப்பையும் கைவிட்டுவிட்டதாக சிலர் விமர்சித்தாலும், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வருவதாக மாவை சேனாதிராஜா இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்காக தொடர்ந்தும் போராடி வருவதாக தெரிவித்த அவர், தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் உள்வாங்கி, வடக்கு கிழக்கை தமிழ் பேசும் மக்களின் தாயகமாக மாற்றவேண்டுமென மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg