Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எமக்கான அரசியல்தீர்வைப் பெறுவதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது: சிறீதரன்

In இலங்கை
Updated: 10:55 GMT, Sep 18, 2017 | Published: 10:55 GMT, Sep 18, 2017 |
0 Comments
1209
This post was written by : Ravivarman

எமக்கான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மீள்குடியேறியுள்ள பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னமும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது.

ஈடு செய்ய முடியாத இழப்புக்களுடனும் வேதனைகளுடனும் வாழ்ந்து வரும் மக்களுக்கான வாழ்வாதாரங்கள் உயர்த்தப்படவேண்டும்.

மக்களது வறுமை நிலையைப் போக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg