Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ட்ரம்ப் முயற்சி

In உலகம்
Published: 05:09 GMT, Sep 19, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Suganthini

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து சர்வதேச நாட்டுத் தலைவர்களுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச் சபைக் கூட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இதில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்களுடனேயே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப இது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அதற்கான ஆரம்ப செயற்பாடுகளை இன்று ஆரம்பிக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும், அவர் இதனை அழுத்தமாக வலியுறுத்தியிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ட்ரம்ப், முதல் முறையாக ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதுடன், இன்று முக்கிய உரையொன்றையும் ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg