Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீசாந்த் விடயத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது! – பி.சி.சி.ஐ. வழக்குத் தாக்கல்

In இந்தியா
Updated: 07:46 GMT, Sep 19, 2017 | Published: 07:43 GMT, Sep 19, 2017 |
0 Comments
1278
This post was written by : Varshini

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை கேரள உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், ஸ்ரீசாந்த் விடயத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாதென பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை) குறிப்பிட்டுள்ளது. போதுமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஸ்ரீசாந்த் தண்டிக்கப்பட்டுள்ளாரென குறிப்பிட்டுள்ள பி.சி.சி.ஐ, கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, ஸ்ரீசாந்த் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு குறித்த வழக்கிலிருந்து ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டார்.

எனினும், இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டுச் சபையினால் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றில் ஸ்ரீசாந்த் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், ஸ்ரீசாந்த சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்கான ஆதாரம் எதுவும் இல்லையென அவர் மீதான தடையை கேரள உயர் நீதிமன்றம் அண்மையில் நீக்கியது.

இச் செயற்பாடானது, பி.சி.சி.ஐ.யின் விதிமுறையை மீறும் செயலென குறிப்பிட்டே, அதற்கெதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg