Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தினகரன்: செந்தில் கைது தொடர்பில் இடைக்கால தடையுத்தரவு

In இந்தியா
Published: 09:15 GMT, Sep 19, 2017 |
0 Comments
1078
icon_com
This post was written by : Kemasiya
fyhjfrth

டி.டி.வி தினகரன் மற்றும் நடிகர் செந்திலை கைது செய்ய, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.டி.வி தினகரன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து பலரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றார். இந்த வரிசையில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திராவை நீக்கிவிட்டு அந்த பொறுப்பில் செந்திலை நியமனம் செய்தார்.

இதையடுத்து தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்த போது ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் நடிகர் செந்தில் பேசியதாக எம்.பி ப.குமார் திருச்சி மாநகர குற்றப் பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்.

தினகரன் தூண்டுதலின் அடிப்படையில் செந்தில் பேசியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தினகரன் மற்றும் செந்தில் மீது கொலை மிரட்டல் உட்பட நான்கு பிரிவுகளின் பேரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக, தினகரன் தலைமையிலான திருச்சியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ப.குமார் முறைப்பாடு தொடர்பாக தினகரன், நடிகர் செந்தில் கைது செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்த உயர் நீதிமன்றத்தில் செந்தில் கைதுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

இதன் காரணமாக குறித்த கைது நடவடிக்கைக்கு ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg