Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மனித உரிமைகள் ஆணையாளரிடம் இலங்கை தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்!

In இலங்கை
Updated: 11:44 GMT, Sep 19, 2017 | Published: 09:34 GMT, Sep 19, 2017 |
0 Comments
1384
icon_com
This post was written by : Surenth
Maithiripala Srisena With Seid Al Hussein

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுஸைனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பு இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையும் எனவும் ஜெனீவா பிரேரணை அமுலாக்கம் மற்றும் மறுசீரமைப்பு போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் தாமதம் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முதலான விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, அண்மையில் அமுழுக்கு கொண்டுவரப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் குறித்தும், அதன் செயன்முறைகளின் அமுலாக்கம் குறித்தும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துரைப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg