Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர் இரட்டை படுகொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

In இலங்கை
Updated: 07:24 GMT, Sep 20, 2017 | Published: 07:24 GMT, Sep 20, 2017 |
0 Comments
1113
This post was written by : Arul Jesu

ஏறாவூரில் தாய் மற்றும் மகள் ஆகியோரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்கள் இன்று (புதன்கிழமை) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது வழக்கை விசாரித்த நீதிபதி மொஹமட் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி குறித்த ஐவரையும் அடுத்த மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்த தாய், மகள் ஆகியோர் கடந்த வருடம் செப்டேம்பர் மாதம் 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்களில் அபூபக்கர் முஹம்மது பிலால் என்பவர் கடந்த 14 ஆம் திகதி வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஆயினும், பிணை வழங்கப்பட்ட மற்றைய சந்தேக நபரான இஸ்மாயில் முஹம்மது பாஹிர் என்பவர் பிணைத் தொகையான இரண்டரை இலட்ச ரூபா ரொக்கப் பணத்தை செலுத்தத் தவறியதால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg