Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றவியல் சட்டத்தினை நவீனமயப்படுத்த வேண்டும்-கியூபெக் நீதி அமைச்சர்

In கனடா
Updated: 09:56 GMT, Sep 20, 2017 | Published: 09:55 GMT, Sep 20, 2017 |
0 Comments
1176
This post was written by : Anojkiyan

கனடாவில் நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாவதனை தடுப்பதற்கும், விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும் நாட்டின் குற்றவியல் சட்டத்தினை நவீனமயப்படுத்த வேண்டும் என கியூபெக்கின் நீதி அமைச்சர் ஸ்டீபனி வெல்லி   கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் தாமும், ஏனைய மாநில நிதி அமைச்சர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், இந்த குற்றவியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் போது மேம்போக்கான மாற்றங்களை மாத்திரம் மேற்கொள்ளாது, அடிப்படையிலிருந்தே அதனை நவீனமயப்படுத்தி திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக கியூபெக் அரசாங்கம், நீதிபதிகளினதும், சட்டத்தரணிகளிகளினதும் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், 135 மில்லியன் டொலர்களை அதற்காக தமது அரசாங்கம் முதலிட்டுள்ளதாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

இருந்த போதிலும் இன்னமும் பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாகவும், இவ்வாறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில் ஏற்படும் தாமதத்திற்கு குற்றவியல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளும் காரணமாக உள்ளது எனவும் அவர் விபரித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg