Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆயிரம் மைல் தூரத்தை கடந்து மின்சார பேருந்து உலக சாதனை

In தொழில்நுட்பம்
Updated: 06:48 GMT, Sep 25, 2017 | Published: 11:50 GMT, Sep 25, 2017 |
0 Comments
1551
icon_com
This post was written by : Risha
electricbus

ஒரே ஒரு தடவை சார்ஜ் செய்யப்பட்டு பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட மின்சார பேருந்தொன்று ஆயிரம் மைல் தூரத்தை வெற்றிகரமாக கடந்து உலக சாதனை படைத்துள்ளது.

கலிஃபோர்னிய நிறுவனமொன்றின் தயாரிப்பான 40 அடி நீளமான குறித்த பேருந்தானது இன்டியானாவில் பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இதன்போது, குறித்த பேருந்து 1102.2 மைல் தூரத்திற்கு பயணித்துள்ளது.

வளி மாசை தடுக்கும் வகையில் உலக நாடுகள் பலவும் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கு சாதகமாக இப்பரீட்சார்த்த ஓட்டம் வெற்றியளித்துள்ளது.

இதற்கு முன்னர் இலகு ரக மின்சார பயணிகள் வாகனமொன்று 1013.76 மைல் தூரம்வரை பயணித்திருந்தமையே உலக சாதனையாக காணப்பட்டது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg