Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி தொடர்பில் பிரதமருடன் ஆலோசனை: அருண் ஜெட்லி

In இந்தியா
Published: 04:22 GMT, Sep 21, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Kemasiya
sdhshb

பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசி பொருளாதார வளயர்ச்சியை முடக்கி விட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன் கழமை) இடம்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திதொடர் முடிவின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது  அருண் ஜெட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் ஜூன் 30ஆம் திகதியுடன் முடிந்த நிலையில், காலாண்டில் 5.7 சதவீதம் ஆக சரிந்துள்ளது. இது 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த வளர்ச்சி வீதம் ஆகும். பண வீக்கத்தைப் பொறுத்தமட்டில் 4 சதவீதம் என்ற பணக்கொள்கை இலக்குக்குள்தான் இருக்கின்றது என அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பருவமழைக் காலத்தில் காய்கறி விலைகள் சாதாரணமாக உயரும். இது உயரும் காலம். இந்த காலகட்டத்தில் 3.6 சதவீதம் என்பது பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையே காட்டுகிறது.

ஓகஸ்டு மாதம் சில்லரை பணவீக்க விகிதம் 5 மாதங்களில் இல்லாத உயர்ந்தபட்ச அளவாக 3.36 சதவீதமாக இருந்தது. கைவசமுள்ள அனைத்து பொருளாதார குறியீடுகளையும் கவனத்தில் கொண்டுள்ளோம். தேவைப்படுகிற எந்தவொரு கூடுதலான நடவடிக்கையையும் அரசு எடுக்கும்.

பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விட ஏதுவாக கூடுதல் (அதிரடி) நடவடிக்கைகள் எடுப்பது பற்றி செயலாற்றி வருகிறோம். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg