Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“இயக்குநரால் ஜெயித்துவிட்டேன்“ – ‘ஸ்பைடர்’ வில்லன் நெகிழ்ச்சி

In சினிமா
Updated: 09:32 GMT, Sep 21, 2017 | Published: 06:59 GMT, Sep 21, 2017 |
0 Comments
1571
This post was written by : Varothayan
spyder-movie-pre-release-images-1106a93

‘ஸ்பைடர்’ படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என உணர்ந்ததால் இயக்குநர் அழைத்தார் என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள ஸ்பைடர் படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது.

இதில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, படம் குறித்து கூறுகையில், ஸ்பைடர் படத்தில் வில்லன் கரெக்டரில் நடிக்கிறீர்களா? என்று ஏ.ஆர்.முருகதாஸ் கேட்டார். அவர் என்னிடம் பணியாற்றியவர் என்பதற்காக இந்த வாய்ப்பைக் கொடுக்கவில்லை.

நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் எப்போது உணர்ந்தாரோ, அழைத்தாரோ, அப்போதே நான் நடிகனாக ஜெயித்து விட்டேன். என்ன கதை என்றுகூட கேட்காமல், என்னிடம் அவரை ஒப்படைத்தேன். இப்போது என்னை வேறொரு லெவலில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

இப்போது என் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடங்கியிருக்கிறது. சில கதைகள் கைவசம் இருக்கிறன. என்றாலும், இப்போது படம் இயக்க மாட்டேன். சொந்தப் படம் தயாரிக்க மாட்டேன். இனி நான் நடிகன் மட்டுமே. அதுதான் என் அடையாளமும் கூட.

தற்போது ஸ்பைடர் படத்தில் டார்க் வில்லன். மெர்சல் படத்தில் ஸ்டைல் வில்லன். நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நெகட்டிவ் ஹீரோ. இறவாக்காலம் படத்தில் ஹீரோ. இனி அடுத்தடுத்த படங்கள் மூலம் ஹீரோவாகிறேன்  என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg