Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சமாதானமும் ஒற்றுமையுமே சர்வதேசத்தை வெற்றிகொள்ள ஒரே வழி: சாகல ரத்னாயக்க

In இலங்கை
Updated: 12:51 GMT, Sep 21, 2017 | Published: 10:33 GMT, Sep 21, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Arul Jesu
sagala redcross (4)

நாட்டில் சமதானமும் ஒற்றுமையும் காணப்பட்டால் மாத்திரமே சர்வதேசத்தை வெற்றிகொள்ள முடியும் என அமைச்சர் சாகல ரத்னாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொறவக்கந்த பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று (வியாழக்கிழமை) நாட்டி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேசம் இலங்கை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே இலங்கைக்கு பல உதவிகள் கிடைக்க பெறுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதன்போது, பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான முழு செலவையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஏற்றுள்ளதோடு இந்த கிராமத்திற்கு செஞ்சிலுவை கிராமம் என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டு பாவணை பொருட்கள் அடங்கிய பொதியும் செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இரு மாடிகள் கொண்ட வீடுகளாக 12 வீடுகளும் 6 மாதக்காலத்தில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் ஜகத் அபேசிங்க, மாத்தறை மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்னாயக்க, கொட்டப்பொல பிரதேச செயலாளர் கணேச அமரசிங்க ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

sagala redcross (1) sagala redcross (3) (1) sagala redcross (3) sagala redcross (5) sagala redcross (6) sagala redcross (7)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg