Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத வெளிநாட்டு நாணயத்தாள்: இருவர் கைது!

In இலங்கை
Updated: 07:57 GMT, Sep 22, 2017 | Published: 07:57 GMT, Sep 22, 2017 |
0 Comments
1232
This post was written by : Ravivarman

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணய தாள்களைக் கொண்டு செல்ல முயற்சித்த இருவரை கைது செய்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

டுபாய் நாட்டுக்கு செல்ல முயற்சித்த இருவரும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.25 மணியளவில் ul 225 விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 88 மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டன.

தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண்ணும் 24 வயதுடைய ஆணும் நாணய தாள்களை சட்டவிரோதமாக கடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் 45 ஆயிரம், யூரோ 35 ஆயிரம், ஓமான் றியால் 4000, பஹ்ரெய்ன் டினார் 2685, சவூதிரோபியா றியால் 599500, டுபாய் திர்ஹம் 7200 கைப்பற்றப்பட்டுள்தாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

IMG-20170921-WA0026

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg