Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விராட் கோஹ்லியுடன் அனுஷ்கா காதலுக்காக இணையவில்லை?-கசிந்தது உண்மை

In சினிமா
Published: 09:53 GMT, Sep 22, 2017 |
0 Comments
4643
This post was written by : Surenth
Anushka With Virat Kholi

பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லியும் சில வருடங்களாக நெருக்கமாகப் பழகி வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன்.

இந்த செய்திகளை இருவரும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் காதலிப்பதாகவே கூறப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க அனுஷ்கா சர்மாவும், விராட் கோஹ்லியும் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் சில முக்கிய இடங்களில் நிலங்கள் வாங்கியுள்ளனர். அந்த இடங்களில் அவர்கள் இருவரும் இணைந்து ஆடம்பர உணவு விடுதி கட்ட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆடம்பர உணவு விடுதி கட்டுவதற்கான பணிகளை இருவரும் ஆரம்பித்துள்ளதாகவும், விரைவில் குறித்த ஆடம்பர உணவு விடுதி திறக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முன்னணி நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற தொழில்களைத் தொடங்கிவருகிறார்கள். அந்த வகையில் அனுஷ்கா சர்மாவும் முன்கூட்டியே இந்தத் திட்டத்தில் இறங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg