Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிள்ளைகளின் ஆசையை நிறைவேறிய வோனர்

In விளையாட்டு
Published: 09:51 GMT, Sep 22, 2017 |
0 Comments
3906
icon_com
This post was written by : Arul Jesu
201709221341080389_Warners-children-in-Chennai_SECVPF

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவுக்கு விஜயம் செய்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருவதுடன், இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாட எதரிபார்த்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் அவுஸ்திரேலிய வீரரர்கள் தனியாகவும், குடும்பம் சகிதமும் பார்யிட்டு வருவதுடன் பொருட்களையும் கொவனவு செய்து வருகின்றனர்.

இதற்கமைய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் அண்மையில் சென்னையின் அழகை ரசிக்க தமது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுள்ளார்.

இவ்வாறு சென்னையின் அழகில் மயங்கிய வோனரின் இரண்டு பெண் பிள்ளைகளும் தமது தந்தையிடம் லெமன் ஜுஸ் வேண்டும் என அடம்பிடித்துள்ளனர்.

அவர்களின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய வோனர் சென்னை கடை தெருவில் பழச்சாறு விற்கும் பெண் ஒருவரிடம் தமது காரை நிறுத்தி பிள்ளைகளுக்கு லெமன் ஜுஸ் வாங்கி கெடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை புகைப்படமாக பதிவு செய்த வோனர் அதனை தமது இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றியுள்ளார்.

உலகம் முழுதும் சுற்றினாலும் தமிழன் உபசரிக்காத மனித இனமே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் அல்லவா?

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg