Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஏவுகணை வல்லமையை ஊக்குவிக்கவுள்ளதாக ஈரான் சூளுரை

In உலகம்
Published: 06:28 GMT, Sep 23, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Suganthini
iran 11

ஈரானின் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள் தொடர்பான வல்லமையை ஊக்குவிக்கவுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரோஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஏவுகணைப் பரிசோதனை தொடர்பில் அமெரிக்காவும் பிரான்ஸும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஈரான் ஜனாதிபதி மேலும் தெரிவித்தபோது,’உலக அதிகார சக்திகளுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி நிபந்தனைகளை மீறாத வகையில், அணு ஆயுதமொன்றை ஏந்திச் செல்வதற்காக வடிவமைக்கப்படாத ஏவுகணைகளின் உருவாக்கம் முழுமையாக நியாயபூர்வமானதாகும்’ என்றார்.

‘நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு அவசியமான எமது இராணுவ நடவடிக்கைகளை பலப்படுத்தவுள்ளோம். நாம் எமது ஏவுகணைகளை மட்டுமல்லாது, எமது தரை, வான் மற்றும் கடற்படைகளையும் பலப்படுத்தவுள்ளோம்’ என்றார்.

‘மேலும், எமது பாதுகாப்பு என்று வரும்போது, எவருடைய அனுமதியையும் நாம் கேட்கத் தேவையில்லை’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg