Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியில் விமானம் விபத்து

In
Updated: 06:40 GMT, Sep 23, 2017 | Published: 06:40 GMT, Sep 23, 2017 |
0 Comments
1232
This post was written by : Suganthini

துருக்கி, இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த விமானமொன்று, திடீரெனக் கீழே விழுந்து சேதமடைந்துள்ளது.

தனியாருக்குச் சொந்தமான சொகுசு விமானமொன்று, புறப்படுவதற்குத் தயாராகி மேலெழுந்த வேளையில் திடீரெனக் கீழே விழுந்து, தீப்பற்றி எரிந்துள்ளது.

எனினும், இந்த விமானத்தில் பயணிக்கவிருந்த விமானிகள் இருவரும் விமானப் பணியாளர் ஒருவரும் பயணியொருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த விபத்தை அடுத்து, மேற்படி விமான நிலையத்தில் விமான சேவைகள் சிறிது நேரத்துக்கு தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg